أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: An-Nâzi‘ât الأحد 02 يوليو 2017, 1:43 am | |
| An-Nâzi‘ât அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [79:1] (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக- [79:2] (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- [79:3] வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- [79:4] முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- [79:5] ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- [79:6] பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்; [79:7] அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். [79:8] அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும். [79:9] அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும். [79:10] நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா? என்று கூறுகிறார்கள். [79:11] மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா? [79:12] அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும் என்றும் கூறுகின்றார்கள். [79:13] ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- [79:14] அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். [79:15] (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? [79:16] 'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து, [79:17] நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான். [79:18] இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும். [79:19] அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய் (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). [79:20] ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார். [79:21] ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான். [79:22] பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான். [79:23] அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான். [79:24] நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா என்று (அவர்களிடம்) கூறினான். [79:25] இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான். [79:26] நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது. [79:27] உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். [79:28] அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். [79:29] அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான். [79:30] இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான். [79:31] அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். [79:32] அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். [79:33] உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்). [79:34] எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், [79:35] அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். [79:36] அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். [79:37] எனவே, எவன் வரம்பை மீறினானோ - [79:38] இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- [79:39] அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும். [79:40] எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, [79:41] நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். [79:42] (நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள். [79:43] அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? [79:44] அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது. [79:45] அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம், [79:46] நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும். |
|