أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Humazah الأحد 02 يوليو 2017, 4:03 am | |
| Al-Humazah அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [104:1] குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். [104:2] (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். [104:3] நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். [104:4] அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். [104:5] ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? [104:6] அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். [104:7] அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். [104:8] நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். [104:9] நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). |
|