أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Zalzalah الأحد 02 يوليو 2017, 3:59 am | |
| Al-Zalzalah அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [99:1] பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது [99:2] இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- [99:3] அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது- [99:4] அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும். [99:5] (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால். [99:6] அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். [99:7] எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். [99:8] அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். |
|