أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Ghâshiyah الأحد 02 يوليو 2017, 1:52 am | |
| Al-Ghâshiyah அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [88:1] சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? [88:2] அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். [88:3] அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். [88:4] கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். [88:5] கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். [88:6] அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. [88:7] அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. [88:8] அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். [88:9] தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும். [88:10] உன்னதமான சுவர்க்கச் சோலையில்- [88:11] அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை. [88:12] அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு. [88:13] அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு. [88:14] (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும். [88:15] மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்- [88:16] விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு. [88:17] (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- [88:18] மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், [88:19] இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், [88:20] இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) [88:21] ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். [88:22] அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். [88:23] ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ- [88:24] அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான். [88:25] நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. [88:26] பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது. |
|