أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Burûj الأحد 02 يوليو 2017, 1:49 am | |
| Al-Burûj அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [85:1] கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, [85:2] இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, [85:3] மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, [85:4] (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர். [85:5] விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்). [85:6] அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, [85:7] முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர். [85:8] (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. [85:9] வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். [85:10] நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. [85:11] ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும். [85:12] நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. [85:13] நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான். [85:14] அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். [85:15] (அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன். [85:16] தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். [85:17] (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா, [85:18] ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும், [85:19] எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர். [85:20] ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான். [85:21] (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். [85:22] (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது. |
|