أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: At-Takwîr الأحد 02 يوليو 2017, 1:45 am | |
| At-Takwîr அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [81:1] சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது [81:2] நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- [81:3] மலைகள் பெயர்க்கப்படும் போது- [81:4] சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- [81:5] காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது- [81:6] கடல்கள் தீ மூட்டப்படும்போது- [81:7] உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- [81:8] உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- [81:9] எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது? என்று- [81:10] பட்டோலைகள் விரிக்கப்படும் போது- [81:11] வானம் அகற்றப்படும் போது- [81:12] நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது- [81:13] சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- [81:14] ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். [81:15] எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- [81:16] முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), [81:17] பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், [81:18] மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. [81:19] நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். [81:20] (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். [81:21] (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். [81:22] மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். [81:23] அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். [81:24] மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். [81:25] அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. [81:26] எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? [81:27] இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். [81:28] உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). [81:29] ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். |
|