أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: An-Naba’ الأحد 02 يوليو 2017, 1:41 am | |
| An-Naba’ அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [78:1] எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? [78:2] மகத்தான அச்செய்தியைப் பற்றி, [78:3] எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி, [78:4] அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். [78:5] பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள். [78:6] நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? [78:7] இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? [78:8] இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம். [78:9] மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். [78:10] அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். [78:11] மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம். [78:12] உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம். [78:13] ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம். [78:14] அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம். [78:15] அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக. [78:16] (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக). [78:17] நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. [78:18] ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். [78:19] இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். [78:20] மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும். [78:21] நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. [78:22] வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. [78:23] அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். [78:24] அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். [78:25] கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. [78:26] (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். [78:27] நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர். [78:28] அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். [78:29] நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம். [78:30] ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம் (என்று அவர்களுக்குக் கூறப்படும்). [78:31] நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது. [78:32] தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். [78:33] ஒரே வயதுள்ள கன்னிகளும். [78:34] பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). [78:35] அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள். [78:36] (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும். [78:37] (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள். [78:38] ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். [78:39] அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. [78:40] நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான். |
|