|
| As-Sâffât | |
| | كاتب الموضوع | رسالة |
---|
أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: As-Sâffât الإثنين 26 يونيو 2017, 5:00 am | |
| As-Sâffât அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [37:1] அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக, [37:2] பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக, [37:3] (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக, [37:4] நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே. [37:5] வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன். [37:6] நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். [37:7] (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). [37:8] (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். [37:9] (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு. [37:10] (ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும். [37:11] ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம். [37:12] (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர். [37:13] அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை. [37:14] அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர். [37:15] இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். [37:16] நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.) [37:17] அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.) [37:18] ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள் என்று (நபியே!) நீர் கூறும். [37:19] ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள். [37:20] (அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர். [37:21] நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்! (என்று அவர்களுக்குக் கூறப்படும்.) [37:22] அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள். [37:23] அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். [37:24] இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள் (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்) [37:25] உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை? (என்று கேட்கப்படும்). [37:26] ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள். [37:27] அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள். [37:28] (தம் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள். [37:29] ("அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!" என்று அ(த்தலை)வர்கள் கூறுவர். [37:30] அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள். [37:31] ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்! [37:32] (ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்." [37:33] ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள். [37:34] குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம். [37:35] அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். [37:36] ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா? என்றும் அவர்கள் கூறுகிறார்கள். [37:37] அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார். [37:38] (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம். [37:39] ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள். [37:40] அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)- [37:41] அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. [37:42] கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்; [37:43] இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - [37:44] ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). [37:45] தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும். [37:46] (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. [37:47] அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். [37:48] இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். [37:49] (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். [37:50] (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். |
| | | أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: رد: As-Sâffât الإثنين 26 يونيو 2017, 5:01 am | |
| [37:51] அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார். [37:52] (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான். [37:53] நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா? என்றும் கேட்டான். [37:54] (அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார். [37:55] அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார். [37:56] (அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே! [37:57] என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன். [37:58] (மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா? [37:59] (இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் என்று கூறுவார். [37:60] நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும். [37:61] எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும். [37:62] அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா? [37:63] நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம். [37:64] மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். [37:65] அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும். [37:66] நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள். [37:67] பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும். [37:68] அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான். [37:69] நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள். [37:70] ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள். [37:71] இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர். [37:72] மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம். [37:73] பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும். [37:74] அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர. [37:75] அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். [37:76] ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். [37:77] மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். [37:78] மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். [37:79] ஸலாமுன் அலாநூஹ் - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக. [37:80] இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம். [37:81] நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர். [37:82] பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம். [37:83] நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம். [37:84] அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக). [37:85] அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது, [37:86] அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்? [37:87] அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன? (என்று கேட்டார்.) [37:88] பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். [37:89] நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன் என்றும் கூறினார். [37:90] எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர். [37:91] அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார். [37:92] உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை? (என்றும் கேட்டார்.) [37:93] பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார். [37:94] (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள். [37:95] அவர் கூறினார்! "நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?" [37:96] உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான். [37:97] அவர்கள் கூறினார்கள்; "இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்." [37:98] (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம். [37:99] மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்." [37:100] என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக (என்று பிரார்த்தித்தார்). |
| | | أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: رد: As-Sâffât الإثنين 26 يونيو 2017, 5:02 am | |
| [37:101] எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். [37:102] பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." [37:103] ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது [37:104] நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம். [37:105] திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். [37:106] நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்." [37:107] ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம். [37:108] இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்; [37:109] ஸலாமுன் அலா இப்ராஹீம் (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! [37:110] இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். [37:111] நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். [37:112] ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம். [37:113] இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர். [37:114] மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம். [37:115] அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திருந்து இரட்சித்தோம். [37:116] மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள். [37:117] அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம். [37:118] இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம். [37:119] இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்; [37:120] ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக. [37:121] இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறொம். [37:122] நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள். [37:123] மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம். [37:124] அவர் தம் சமூகத்தவரிடம்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக). [37:125] நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு' (எனும் சிலையை) வணங்குகிறீர்களா? [37:126] அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடை முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்." [37:127] ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள். [37:128] அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.) [37:129] மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்; [37:130] ஸலாமுன் அலா இல்யாஸீன் இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக. [37:131] இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம். [37:132] நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர். [37:133] மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர். [37:134] அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் - [37:135] பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து. [37:136] பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம். [37:137] இன்னும், நீங்கள் காலை வேலைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள். [37:138] இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா? [37:139] மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர். [37:140] நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது - [37:141] அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்). [37:142] ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று. [37:143] ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் - [37:144] (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். [37:145] ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம். [37:146] அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம். [37:147] மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம். [37:148] ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள். ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை சுகிக்;கச்செய்தோம். [37:149] (நபியே!) அவர்களிடம் கேளும்; உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று. [37:150] அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா? |
| | | أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: رد: As-Sâffât الإثنين 26 يونيو 2017, 5:03 am | |
| [37:151] அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர். [37:152] அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான் (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே! [37:153] (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? [37:154] உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்? [37:155] நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா? [37:156] அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? [37:157] நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள். [37:158] அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். [37:159] எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன். [37:160] அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து. [37:161] ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும். [37:162] (எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது. [37:163] நரகைச் சென்றடைபவர்களைத் தவிர. [37:164] (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;) "குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை." [37:165] நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்). [37:166] மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்." [37:167] (நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்; [37:168] முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் - [37:169] அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று. [37:170] ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்! [37:171] தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது. [37:172] (அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் - [37:173] மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள். [37:174] (ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக! [37:175] (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள். [37:176] நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்? [37:177] (அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும். [37:178] ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக. [37:179] (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள். [37:180] அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன். [37:181] மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக. [37:182] வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்). |
| | | | As-Sâffât | |
|
مواضيع مماثلة | |
|
| صلاحيات هذا المنتدى: | لاتستطيع الرد على المواضيع في هذا المنتدى
| |
| |
| |