أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52580 العمر : 72
| موضوع: At-Târiq الأحد 02 يوليو 2017, 4:23 am | |
| At-Târiq NUMBER: 86 அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [86:1] வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக [86:2] தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? [86:3] அது இலங்கும் ஒரு நட்சத்திரம். [86:4] ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. [86:5] மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். [86:6] குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். [86:7] முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. [86:8] இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். [86:9] இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். [86:10] மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை. [86:11] (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, [86:12] (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, [86:13] நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். [86:14] அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. [86:15] நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். [86:16] நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். [86:17] எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. |
|