أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-‘Alaq الأحد 02 يوليو 2017, 2:04 am | |
| Al-‘Alaq அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [96:1] (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. [96:2] 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். [96:3] ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. [96:4] அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். [96:5] மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். [96:6] எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். [96:7] அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது, [96:8] நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது. [96:9] தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா? [96:10] ஓர் அடியாரை - அவர் தொழும்போது, [96:11] நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும், [96:12] அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், [96:13] அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா, [96:14] நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? [96:15] அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். [96:16] தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, [96:17] ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். [96:18] நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். [96:19] (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. |
|