أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Ash-Shams الأحد 02 يوليو 2017, 1:56 am | |
| Ash-Shams அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [91:1] சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக [91:2] (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக- [91:3] (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக- [91:4] (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக- [91:5] வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக- [91:6] பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக- [91:7] ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக- [91:8] அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். [91:9] அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். [91:10] ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். [91:11] 'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர். [91:12] அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது, [91:13] அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார். [91:14] ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான். [91:15] அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை. |
|