أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Balad الأحد 02 يوليو 2017, 1:54 am | |
| Al-Balad அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [90:1] இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். [90:2] நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், [90:3] பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, [90:4] திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். [90:5] 'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா? [90:6] ஏராளமான பொருளை நான் அழித்தேன் என்று அவன் கூறுகிறான். [90:7] தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? [90:8] அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா? [90:9] மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? [90:10] அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். [90:11] ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. [90:12] (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். [90:13] (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- [90:14] அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். [90:15] உறவினனான ஓர் அநாதைக்கோ, [90:16] அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). [90:17] பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். [90:18] அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். [90:19] ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர். [90:20] அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது. |
|