أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Fajr الأحد 02 يوليو 2017, 1:53 am | |
| Al-Fajr அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [89:1] விடியற் காலையின் மீது சத்தியமாக, [89:2] பத்து இரவுகளின் மீது சத்தியமாக, [89:3] இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக, [89:4] செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக, [89:5] இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா? [89:6] உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? [89:7] (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், [89:8] அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. [89:9] பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) [89:10] மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) [89:11] அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். [89:12] அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். [89:13] எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். [89:14] நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான். [89:15] ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான். [89:16] எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான். [89:17] அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. [89:18] ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. [89:19] இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். [89:20] இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். [89:21] அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, [89:22] உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, [89:23] அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். [89:24] என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே! என்று அப்போது மனிதன் கூறுவான். [89:25] ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். [89:26] மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான். [89:27] (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! [89:28] நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. [89:29] நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. [89:30] மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). |
|