أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: ‘Abasa الأحد 02 يوليو 2017, 1:44 am | |
| ‘Abasa அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [80:1] அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். [80:2] அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, [80:3] (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? [80:4] அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம். [80:5] (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ- [80:6] நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர். [80:7] ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை. [80:8] ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ, [80:9] அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக- [80:10] அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர். [80:11] அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும். [80:12] எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார். [80:13] (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது. [80:14] உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது. [80:15] (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்- [80:16] (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள். [80:17] (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்! [80:18] எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?) [80:19] (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான். [80:20] பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான். [80:21] பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான். [80:22] பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான். [80:23] (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை. [80:24] எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். [80:25] நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். [80:26] பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து- [80:27] பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். [80:28] திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- [80:29] ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - [80:30] அடர்ந்த தோட்டங்களையும், [80:31] பழங்களையும், தீவனங்களையும்- [80:32] (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, [80:33] ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது - [80:34] அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - [80:35] தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; [80:36] தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- [80:37] அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். [80:38] அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். [80:39] சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். [80:40] ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். [80:41] அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும். [80:42] அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள். |
|