أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Mursalât الأحد 02 يوليو 2017, 12:21 am | |
| Al-Mursalât அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [77:1] தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக [77:2] வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)- [77:3] (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக- [77:4] (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)- [77:5] (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)- [77:6] (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்) [77:7] நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும். [77:8] இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது- [77:9] மேலும், வானம் பிளக்கப்படும் போது- [77:10] அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது- [77:11] மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது- [77:12] எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன? [77:13] தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான். [77:14] மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது? [77:15] (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான். [77:16] முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா? [77:17] பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம். [77:18] குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்). [77:19] பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:20] அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? [77:21] பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம். [77:22] ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை. [77:23] இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர். [77:24] பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:25] பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா? [77:26] உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). [77:27] அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். [77:28] பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:29] நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக (என்று அவர்களுக்குக் கூறப்படும்). [77:30] மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக. [77:31] (அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல. [77:32] நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும். [77:33] நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும். [77:34] பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:35] இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள். [77:36] அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். [77:37] பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:38] இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்). [77:39] எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள். [77:40] பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:41] நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள். [77:42] இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு. [77:43] நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள் (என்று கூறப்படும்). [77:44] நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம். [77:45] பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:46] (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே. [77:47] பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:48] 'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள். [77:49] பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். [77:50] எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்? |
|