أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52601 العمر : 72
| موضوع: Al-Qiyâmah الأحد 02 يوليو 2017, 12:17 am | |
| Al-Qiyâmah அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [75:1] கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். [75:2] நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். [75:3] (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? [75:4] அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். [75:5] எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். [75:6] கியாம நாள் எப்போழுது வரும்? என்று (ஏளனமாகக்) கேட்கிறான். [75:7] ஆகவே, பார்வையும் மழுங்கி- [75:8] சந்திரன் ஒளியும் மங்கி- [75:9] சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் . [75:10] அந்நாளில் "(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். [75:11] இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை! (என்று கூறப்படும்). [75:12] அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. [75:13] அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். [75:14] எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். [75:15] அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! [75:16] (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள். [75:17] நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. [75:18] எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். [75:19] பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. [75:20] எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். [75:21] ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். [75:22] அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். [75:23] தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். [75:24] ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். [75:25] இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். [75:26] அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், [75:27] மந்திரிப்பவன் யார்? எனக் கேட்கப்படுகிறது. [75:28] ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். [75:29] இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். [75:30] உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. [75:31] ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. [75:32] ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். [75:33] பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். [75:34] கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! [75:35] பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். [75:36] வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? [75:37] (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? [75:38] பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். [75:39] பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். [75:40] (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? |
|